தேன்கனிக்கோட்டை பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு -பக்தர்கள் சாமி தரிசனம்
தேன்கனிக்கோட்டை பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தேன்கனிக்கோட்டை:
வைகுண்ட ஏகாதசியையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் 19 ஆண்டுகளுக்கு பிறகு கார்த்திகை மாதத்தில் நேற்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. அந்த வகையில், தேன்கனிக்கோட்டை நகரில் அமைந்துள்ள ஸ்ரீதேவி, பூதேவி பேட்டராய சுவாமி கோவிலில் அதிகாலையில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த வழிபாட்டில், தேன்கனிக்கோட்டை, தளி, ஓசூர் மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story