கிருஷ்ணகிரியில் 1,598 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.94¼ கோடி கடன் உதவி-அமைச்சர் காந்தி வழங்கினார்


கிருஷ்ணகிரியில் 1,598 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.94¼ கோடி கடன் உதவி-அமைச்சர் காந்தி வழங்கினார்
x
தினத்தந்தி 14 Dec 2021 8:48 PM IST (Updated: 14 Dec 2021 8:48 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் நடந்த நிகழ்ச்சியில் 1,598 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.94¼ கோடி கடனுதவிகளை அமைச்சர் காந்தி வழங்கினார்.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் நடந்த நிகழ்ச்சியில் 1,598 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.94¼ கோடி கடனுதவிகளை அமைச்சர் காந்தி வழங்கினார்.
கடனுதவி 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 1,598 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 21 ஆயிரத்து 511 உறுப்பினர்களுக்கு ரூ.94.23 கோடி மதிப்பில் கடன் உதவிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கிருஷ்ணகிரியில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமை தாங்கி, கடனுதவிகள், நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, எம்.எல்.ஏ.க்கள் ஒய்.பிரகாஷ் (ஓசூர்), டி.மதியழகன் (பர்கூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் மேம்பாட்டு திட்ட இயக்குனர் ஈஸ்வரன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் காந்தி பேசியதாவது:-
சுய உதவிக்குழுக்கள் 
கடந்த 1989-ம் ஆண்டு மகளிரின் முன்னேற்றத்திற்காக தர்மபுரி மாவட்டத்தில் வேளாண் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டிருந்த மகளிரை கொண்டு சுயஉதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டன. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் தொலைநோக்கு பார்வையில் தொடங்கப்பட்ட இத்திட்டம் மூலம் மகளிர் சமூக, பொருளாதார மேம்பாட்டை அடைந்து வருகின்றனர்.
மகளிரை கொண்டு சுய உதவிக்குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளை உருவாக்கி, முறையான பயிற்சிகள் வழங்க, வருமானம் ஈட்டும் தொழில் தொடங்க கடனுதவிகளும் பெற்று சுய உதவிக்குழு இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறது. தற்போது நலிவுற்றோரை ஒருங்கிணைத்து சிறப்பு குழுக்களும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களை கொண்ட குழுக்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. 
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், முன்னாள் எம்.பி.க்கள் சுகவனம், வெற்றிச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செங்குட்டுவன், முருகன், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் பழனி, முன்னோடி வங்கி மேலாளர் மகேந்திரன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன், தாட்கோ மேலாளர் யுவராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ஏகாம்பரம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட அலுவலர் தமிழ்மாறன், தாசில்தார் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story