ஓசூரில் கள்ளக்காதலனை சந்திக்க சென்ற பெண்ணுக்கு அடி-உதை-கணவர் கைது


ஓசூரில் கள்ளக்காதலனை சந்திக்க சென்ற பெண்ணுக்கு அடி-உதை-கணவர் கைது
x
தினத்தந்தி 14 Dec 2021 8:52 PM IST (Updated: 14 Dec 2021 8:52 PM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் கள்ளக்காதலனை சந்திக்க சென்ற பெண்ணை அடித்து உதைத்து தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

ஓசூர்:
அசாம் மாநிலம் லக்கிபூர் பகுதியை சேர்ந்தவர் 31 வயதான வெல்டர் ஒருவர் தனது 36 வயது மனைவியுடன் ஓசூர் சிப்காட் அருகேயுள்ள பேடரபள்ளியில் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் 36 வயது பெண்ணுக்கும், அதே பகுதியில் தனியார் கியாஸ் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்க்கும் ஒரு நபருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வருவதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த பெண் தனது கள்ளக்காதலனை, தோழி வீட்டில் சந்திப்பதற்காக வெளியில் சென்றார். இதை அறிந்த அந்த பெண்ணின் கணவர் தனது மனைவியை ரகசியமாக பின்தொடர்ந்து சென்று கையும் களவுமாக பிடித்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 
பின்னர் மனைவியை கைகளால் அடித்து உதைத்து சரமாரியாக தாக்கினார். இதில் அந்த பெண் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து அவர் தனது கணவர் மீது ஓசூர் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணின் கணவரான வெல்டரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

Next Story