வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றவர் கைது


வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றவர் கைது
x
தினத்தந்தி 14 Dec 2021 8:59 PM IST (Updated: 14 Dec 2021 8:59 PM IST)
t-max-icont-min-icon

வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றவர் கைது

சேவூர், 
சேவூர் அருகே உள்ள பேரநாயகன்புதூரை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரது மனைவி தேவி. இவர்கள் கடந்த 12-ந் தேதி இரவு தங்களது வீட்டின் உள் அறையில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் மர்ம நபர் இவர்களது வீட்டு பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டுள்ளது. உடனே விழித்துக்கொண்ட இவர்கள் இருவரும் வீட்டின் பின் வாசல் வழியாக வந்து பார்த்தனர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த  பழனிச்சாமி (வயது 45) என்பவர் பூட்டை உடைக்க முயற்சித்தது தெரிய வந்தது. உடனே இருவரும் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் பழனிச்சாமி பிடிக்க முயற்சித்தனர். ஆனால் அவர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து சேவூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிச்சாமியை கைது செய்தனர். 

Next Story