மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தாராபுரம்,
தாராபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ரூ.3 ஆயிரமாக உயர்த்தவேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம்
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தாராபுரம் தாசில்தார் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் என்.கனகராஜ் தலைமை தாங்கினார்.
கோரிக்கைகள்
அப்போது ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவி தொகையை ரு.3 ஆயிரமாக உயர்த்தவேண்டும், மூன்று சக்கர, இருசக்கர வீல்சேர் வாகனங்கள் உள்ளிட்ட மாற்றுதிறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கவேண்டும்.மேலும் 100 நாள் வேலைத் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வழங்கவேண்டும், மாற்று திறனாளிக்கான குறைதீர்க்கும் நாள் முகாம் மாதந்தோறும் தாசில்தார் அலுவலகத்தில் நடத்த வேண்டும்.
இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு விண்ணப்பித்த மாற்றுதிறனாளிகளுக்கு உடனடியாக பட்டா வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
மாற்றுத்திறனாளி சங்கத்தின் தாலுகா செயலாளர் வீரக்குமார், பொருளாளர் சந்திரன், சி.ஐ.டி.யூ. நிர்வாகிகள் பி.பொன்னுச்சாமி, மேகவர்ணன், சுப்பிரமணியன், கண்ணுச்சாமி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story