கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Dec 2021 9:21 PM IST (Updated: 14 Dec 2021 9:21 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் தர்மேந்திரன், திருமலை, வெங்கடேசன், கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் அப்பாவு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகக்குழு கஜேந்திரன், ராமசாமி, சின்னசாமி, கலியபெருமாள் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். 

மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த பயிர்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும், தமிழக அரசு கேட்ட ரூ.4 ஆயிரத்து 25 கோடி நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும், மழையால் சேதம் அடைந்த நெல் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் வேல்முருகன், வேலு, முருகன், கோவிந்தராஜ், தங்கதுரை, நாகப்பன், கனகராஜ், கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story