அரசு பஸ்சை வழிமறித்த காட்டு யானைகள்


அரசு பஸ்சை வழிமறித்த காட்டு யானைகள்
x
தினத்தந்தி 14 Dec 2021 9:23 PM IST (Updated: 14 Dec 2021 9:23 PM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ்சை வழிமறித்த காட்டு யானைகள்

ஊட்டி

மஞ்சூர் சாலையில் அரசு பஸ்சை காட்டு யானைகள் வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

காட்டு யானைகள் 

நீலகிரி மாவட்டத்தில் காட்டு யானை, காட்டெருமை, கரடி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இதில் காட்டுயானை அடிக்கடி வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

மஞ்சூரில் இருந்து கெத்தை வழியாக கோவை மாவட்டம் காரமடைக்கு சாலை செல்கிறது. அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்லும் இந்த சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. 

அரசு பஸ்சை மறித்தது 

இந்த நிலையில் கோவையில் இருந்து 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் மஞ்சூரை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது இரவு 8 மணியளவில் மஞ்சூர்-கோவை சாலை பெரும்பள்ளம் பகுதியில் வந்தபோது, சாலையின் குறுக்கே 4 காட்டு யானைகள் குட்டியுடன் வழிமறித்த படி நின்றன. 

இதனை பார்த்த டிரைவர் பஸ்சை சிறிது தொலைவில் நிறுத்தினார். மஞ்சூரில் இருந்து கோவை நோக்கி சென்ற வாகனங்களும் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டன. காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் சாலையில் ஒரு மணி நேரம் நின்றன. 

பயணிகள் அச்சம் 

இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அச்சம் அடைந்தனர். மேலும் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் காட்டு யானைகள் மண் பாதை வழியாக மெதுவாக வனப்பகுதிக்குள் நடந்து சென்றன. அதன்பின்னர் அரசு பஸ் மற்றும் வாகனங்கள் சென்றன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 


Next Story