தெருநாய்கள் கடித்து குதறியதில் 4 ஆடுகள் செத்தன
தெருநாய்கள் கடித்து குதறியதில் 4 ஆடுகள் செத்தன
அவினாசி,
அவினாசி அருகே தெருநாய்கள் கடித்து குதறியதில் 4 ஆடுகள் செத்தன. 7 ஆடுகள் படுகாயமடைந்தன.
4 ஆடுகள் செத்தன
அவினாசி ஒன்றியம் சின்னேரிபாளையம் ஊராட்சியில் விவசாயிகள் ஆடு மற்றும் கோழிகளை வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில்
மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த ராமசாமி, சாமிநாதன், ரங்கசாமி ஆகியோரது 11 ஆடுகளை தெருநாய்கள் கடித்து குதறியதில் 4 ஆடுகள் பரிதாபமாக செத்தன. 7 ஆடுகள் படுகாயமடைந்தன.
இதுகுறித்து அவினாசி கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த கால்நடை மருத்துவர் வந்து தெருநாய்கள் கடித்து குதறியதில் காயம் அடைந்து கிடந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
நிவாரணம் வழங்க கோரிக்கை
இதேபோல் ஊராட்சி தலைவர் சரவணனின் 15 நாட்டுக்கோழிகளை நாய்கள் கடித்து கொன்றது. நாய்கள் கடித்து செத்த ஆடுகள் மற்றும் கோழிகளுக்கும், காயம்பட்ட ஆடுகளுக்கும் அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றும் இப்பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களையும் பிடித்து அப்புறப்படுத்தவேண்டும் என்றும் அப்பகுதியில் ஆடு,மாடுகள்,கோழிகளை வளர்க்கும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story