கள்ளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு

கள்ளக்குறிச்சி அருகே  மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு
x
தினத்தந்தி 14 Dec 2021 9:29 PM IST (Updated: 14 Dec 2021 9:29 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே முகையூர் கிராமத்தைச் சேர்ந்தவர்  பாண்டுரங்கன் மகன் முருகன்(வயது 37). இவர் சம்பவத்தன்று காலை மோட்டார் சைக்கிளில் வயல்வெளி பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.  அப்போது சுப்பிரமணியன் என்பவரின் வயல்வெளி அருகே வந்தபோது முருகன் நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த பாறைகற்கள் மீது மோதி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக  உயிரிழந்தார். இது குறித்து வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story