சின்ன சேலம் அரசு மாதிரி பள்ளியில் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு
சின்ன சேலம் அரசு மாதிரி பள்ளியில் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு
சின்னசேலம்
பள்ளி கல்வித்துறை சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் சிறப்பு மாதிரி பள்ளிகளை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாதிரி பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. இங்கு சேர்க்கை சேர்க்கை பெறும் மாணவர்கள் தேசிய திறனாய்வு தேர்விலும், 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்விலும் அதிக மதிப்பெண் பெற்ற சிறந்த மாணவர்களை மாநில திட்ட இயக்குனரகம் தேர்வுசெய்யும். இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட 80 மாணவ-மாணவிகளை பிளஸ்-2 தமிழ் மற்றும் ஆங்கில வழியில் உண்டு உறைவிட பள்ளியாக நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளுக்கு தயார்படுத்தும் வகையில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு செயல்படும்.
இந்த மாதிரிப்பள்ளியை ஆய்வு செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மாணவர்களின் திறன்களையும், தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை கேட்டறிந்ததோடு பாதுகாப்பான விடுதி வசதி, தரமான உணவு, இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்து அரசின் நோக்கத்துக்கு ஏற்ப சிறந்த கல்வியாளர்களாக உருவாக மாணவர்களை ஊக்கப்படுத்தி பேசினார். இதில் முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர் சிவராமன், உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனியாப்பிள்ளை, ஒன்றியக்குழு துணைத் தலைவர் அன்புமணி மாறன், மாதிரிப்பள்ளி ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story