நிவாரணம் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி நீடாமங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நீடாமங்கலம்;
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி நீடாமங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
கடும்மழையால் பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நீடாமங்கலம் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் பாரதி மோகன் தலைமை தாங்கினார். தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் ராதா முன்னிலை வகித்தார்.
ரூ.30 ஆயிரம்
கோரிக்கைகளை விளக்கி இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் ஞானமோகன், விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் ராவணன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் டேவிட், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் மணியரசன், உள்ளிட்ட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கடும் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். மழை, வெள்ள பாதிப்பால் வேலை வாய்ப்பை இழந்துள்ள விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.5000 நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
Related Tags :
Next Story