‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கனரக வாகனங்களால் மாணவர்கள் சிரமம்
திண்டுக்கல் ஜி.டி.என். சாலையில் 3 பள்ளிகள் அமைந்து உள்ளன. மாலையில் பள்ளிகள் முடியும் நேரத்தில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் சாலையில் நடந்தும், வாகனங்களிலும் வீட்டுக்கு செல்கின்றனர். இதற்கிடையே பள்ளிகள் விடும் நேரத்தில் லாரிகள், டிராக்டர் உள்ளிட்ட கனரக வாகனங்கள் அந்த வழியாக வருகின்றன. இதனால் மாணவ-மாணவிகள் பெரும் சிரமப்படுகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே பள்ளிகள் முடியும் நேரத்தில் கனரக வாகனங்கள் வருவதை தடுக்க போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும்.
-மகேஸ்வரி, திண்டுக்கல்.
வேகத்தடை அவசியம்
ஆத்தூர் தாலுகா வக்கம்பட்டி ஊராட்சியில் கள்ளுக்கடை பிரிவில் வேகத்தடை எதுவும் இல்லை. அந்த வழியாக வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் பள்ளி மாணவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் சாலையை கடக்க சிரமப்படுகின்றனர். எனவே வேகத்தடை அமைத்து தரவேண்டும்.
-மணிமேகலை, வக்கம்பட்டி.
தெருநாய்கள் தொல்லை
தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள தங்கம்மாள்புரத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தனியாக செல்லும் நபர்களை துரத்தி, துரத்தி நாய்கள் கடிக்கின்றன. இதனால் குழந்தைகள் தெருவில் விளையாட விடுவதற்கு கூட பயமாக உள்ளது. எனவே தெருநாய்கள் தொல்லையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சரவணன், தங்கம்மாள்புரம்.
சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்
திண்டுக்கல் மாநகராட்சியில் ஆர்.எம்.காலனி, தாடிக்கொம்பு சாலை, ரவுண்டுரோடு, நாகல்நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையில் மாடுகள் சுற்றித்திரிவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சேகர், திண்டுக்கல்.
எரியாத தெருவிளக்குகள்
பழனியில் ஆர்.எப்.சாலை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியாகும். இங்கு புதிதாக அமைக்கப்பட்டு இருக்கும் தெருவிளக்குகள் முறையாக எரிவதில்லை. இதனால் சாலை முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். எனவே தெருவிளக்குகளை சரிசெய்ய வேண்டும்.
-கணேசன், பழனி.
Related Tags :
Next Story