மூதாட்டியிடம் 7 பவுன் சங்கிலி பறித்தவர் கைது
கோட்டூர் அருகே மூதாட்டியிடம் 7 பவுன் சங்கிலியை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோட்டூர்;
கோட்டூர் அருகே மூதாட்டியிடம் 7 பவுன் சங்கிலியை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
7 பவுன் சங்கிலி பறிப்பு
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள சித்தேரி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மனைவி சந்திரா(வயது71). சந்திரா கடந்த 6-ந் தேதி சேரன்குளம் கோவில் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்று விட்டு பஸ்சுக்காக காத்திருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் சந்திராவிடம் உங்களை வீ்ட்டுக்கு அழைத்து சென்று விடுகிறேன் என கூறி தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். வீட்டுக்கு சென்றஉடன் தண்ணீர் கேட்பது போல நடித்த சந்திரா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.
கைது
இது குறித்த புகாரின் பேரில் கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை தேடிவந்தனர்.
இதற்காக 70-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை சோதனையிட்டனர். ஆங்காங்கே உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர்.
இந்தநிலையில் பெருகவாழ்ந்தானை சேர்ந்த ஆனந்தன்(42) என்பவரிடம் போலீசார் சந்தேகத்தின் பேரின் விசாரணை நடத்த அவரது வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது அவர் வீட்டில் தப்பி ஓட முயன்றார். அவரை சுற்றி வளைத்து பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் சந்திராவி்டம் சங்கிலியை பறித்து சென்றது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அனந்தன் மீது முத்துப்பேட்டை, பெருகவாழ்ந்தான், களப்பால் நீடாமங்கலம், திருச்சி, திருவெறும்பூர், உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story