915 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.53 கோடி கடன் உதவி
915 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.53 கோடி கடன் உதவி
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை அருகே பால்னாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கிவைத்தார்.
அதைத்தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள 915 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.53 கோடி வங்கிக் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா வழங்கினார்.
இதில் எம்.எல்.ஏ.க்கள் ஜோலார்பேட்டை க.தேவராஜி, திருப்பத்தூர் நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் என்.கே.ஆர். சூரியகுமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, மகளிர் திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story