திருக்கோவிலூர் அருகே 3 குழந்தைகளின் தாய் விஷம் குடித்து தற்கொலை
திருக்கோவிலூர் அருகே 3 குழந்தைகளின் தாய் விஷம் குடித்து தற்கொலை
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள திருப்பாலபந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் தென்னரசு. இவருடைய மனைவி சிவசக்தி(வயது 34). இவர்கள் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். சாதனா(வயது 12), தர்ஷிகா(10) என்ற 2 மகள்களும், யோகேஸ்வரன்(7) என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் சிவசக்தி தனது வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருப்பாலபந்தல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசக்தியின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story