தண்ணீர் தேங்குவதால் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் மீண்டும் மூடல்


தண்ணீர் தேங்குவதால் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் மீண்டும் மூடல்
x
தினத்தந்தி 14 Dec 2021 10:51 PM IST (Updated: 14 Dec 2021 10:51 PM IST)
t-max-icont-min-icon

கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் மீண்டும் மூடல்

வேலூர்

கனமழை காரணமாக வேலூர் கோட்டை அகழியில் தண்ணீர் மட்டம் உயர்ந்தது. இதனால் கோட்டையின் உட்புறத்தில் தாழ்வான இடத்தில் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்குள் தண்ணீர் வரத்தொடங்கியது. அளவுக்கு அதிமாக தண்ணீர் வந்ததால் கடந்த மாதம் கோவில் மூடப்பட்டது. உற்சவர் சாமிகள் வெளியே எழுந்தருள செய்யப்பட்டது. அங்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

 இதையடுத்து கோவிலில் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டதால் மீண்டும் கோவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. 
இந்த நிலையில் மீண்டும் கோவில் வளாகத்தில் தண்ணீர் தேங்க தொடங்கி உள்ளது. இதனால் பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். எனவே நேற்று முதல் மீண்டும் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு கோவில் மூடப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக உற்சவர் சாமிகள் கோவில் வெளியே வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் பலர் வெளியே நின்று சாமியை தரிசனம் செய்தனர்.

Next Story