சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.100.43 கோடி கடன் உதவி
சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.100.43 கோடி கடன் உதவி
நாகர்கோவில்,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் நேற்று நடந்த விழாவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி கலையரங்கில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவிகள் வழங்கப்பட்டது. கடன் உதவிகளை மாவட்ட கலெக்டர் அரவிந்த் வழங்கினார். நிகழ்ச்சியில், ஊரக பகுதியை சார்ந்த 1092 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.62.84 கோடி மதிப்பிலான வங்கி நேரடி கடன், ஒரு ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கு ரூ.1.50 கோடி மதிப்பிலான பெருங்கடன் தொகை மற்றும் நகர்புற பகுதியை சேர்ந்த 801 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.36.09 கோடி மதிப்பிலான வங்கி நேரடி கடன் என மொத்தம் 1894 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.100.43 கோடி மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டது.
விழாவில் திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, முதன்மை மேலாளர் (ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா) ஹரிஹரன், முன்னோடி வங்கி மேலாளர் அருண் நேரு, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா செந்தில், உதவி திட்ட அலுவலர்கள் பாக்கியவதி, அனிதா, வசுமதி, முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story