இணைய தளத்தில் மூழ்கும் குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை மையம்
ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைகள் இணைய தளத்தில் மூழ்கி கிடப்பதை தடுக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சிகிச்சை மையத்தை டீன் திருவாசகமணி திறந்து வைத்தார்.
நாகர்கோவில்,
ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைகள் இணைய தளத்தில் மூழ்கி கிடப்பதை தடுக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சிகிச்சை மையத்தை டீன் திருவாசகமணி திறந்து வைத்தார்.
சிறப்பு சிகிச்சை மையம்
தமிழக முதல்-அமைச்சர் அறிவிப்பின்படி, சுகாதாரத்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின்படி 2021-2022 - ல் ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் மனநலம் குன்றிய ஆதரவற்ற நோயாளிகளுக்கான மீட்பு சேவை மனநல பிரிவு மையம், குழந்தைகள் இணைய தளத்தில் மூழ்கி கிடப்பதை தடுக்க மனநல நிபுணர் குழுவால் வழங்கப்படும் சிறப்பு ஆலோசனை மையம் ஆகியவை மனநல வெளிநோயாளிகள் பிரிவில் அமைக்கப்பட்டு உள்ளது.
தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு பிந்தைய மனஅழுத்தத்தை தடுக்கும் விதமாக மனநல நிபுணர்களால் ஆலோசனை வழங்கும் மையம் பிரசவத்திற்கு பிந்தைய வெளிநோயாளிகள் பிரிவிலும், முதியோர் மற்றும் மனநலம் குன்றியவர்களுக்கு தினசரி பராமரிப்பு மையம் நரம்பியல் துறை பிரிவிலும், பிரசவத்திற்கு பிந்தைய வார்டுகளில் பச்சிளங்குழந்தைகளுக்கு காது கேட்கும் திறன் பரிசோதனை மையம் பிரசவத்திற்கு பிந்தைய வார்டிலும் அமைக்கப்பட்டு உள்ளது. அவற்றை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
திறந்து வைத்தார்
இதில் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி டீன் திருவாசகமணி கலந்து கொண்டு 5 பிரிவுகளையும் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் மருத்துவமனை கண்காணிப்பாளர் அருள் பிரகாஷ், உறைவிட மருத்துவ அதிகாரி ஆறுமுகவேலன், உதவி உறைவிட மருத்துவ அதிகாரிகள் விஜயலெட்சுமி மோகன்தாஸ், ரெனிமோள், நரம்பியல் துறை பேராசிரியர் கிங்ஸ்லி ஜெபசிங், மகப்பேறு துறை பேராசிரியர் சுந்தரவாணி, மனநலத்துறை பேராசிரியர் ராஜசுந்தரி மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story