தஞ்சையில் அமைச்சரின் கார் முன்பு தரையில் படுத்து உருண்ட பெண்ணால் பரபரப்பு சொத்துக்களை அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்

தஞ்சையில் அமைச்சரின் கார் முன்பு தரையில் படுத்து உருண்ட பெண்ணால் பரபரப்பு சொத்துக்களை அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்
x
தினத்தந்தி 15 Dec 2021 12:19 AM IST (Updated: 15 Dec 2021 12:19 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சரின் கார் முன்பு தரையில் படுத்து உருண்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து காரில் இருந்து இறங்கி வந்த அமைச்சரிடம் தனது சொத்தை அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பெண் கோரிக்கை விடுத்தார்.

தஞ்சாவூர்:-

அமைச்சர் கார் முன்பு தரையில் படுத்து உருண்டார்

தஞ்சை மாவட்டத்தில் மக்களை தேடி முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெறும் நிகழ்ச்சி தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு மனுக்களை பெற்றார்.
நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அவர் காரில் ஏற முயன்றபோது தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா திருநல்லூரை சேர்ந்த இந்திரா என்பவர் அமைச்சரின் காரின் காரின் முன்பு தரையில் படுத்து உருண்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனாலும் அந்த பெண், காரில் தேசிய கொடி கட்டி இருந்த கம்பியை பிடித்துக்கொண்டு விட மறுத்தார்.

சொத்து அபகரிப்பு

இதனையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அந்த பெண்ணின் அருகில் வந்து விசாரித்தார். அபபோது அந்த பெண், தான் வைத்திருந்த கோரிக்கை மனுவை அமைச்சரிடம் அளித்தார். மனுவை வாங்கி படித்து பார்த்த அமைச்சர் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறி விட்டு சென்றார்.
பின்னர் இந்திரா கூறுகையில், “எனது கணவர் இறந்து விட்டார். மகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் எங்களுக்கு சொந்தமான நிலத்தை எனது கணவரின் சகோதரர் அபகரித்துக்கொண்டு தர மறுக்கிறார். எங்களுக்கு சொந்தமான மனையில் உள்ள வீட்டை சரி செய்ய சென்ற எனது மகன் மீது பாப்பாநாடு போலீசில் பொய்புகார் அளித்தனர். எனது மகன் நேரில் சென்று விளக்கம் அளித்த பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. மேலும் என்னையும் தாக்கினர். இதனால் நான் தஞ்சையில் கூலி வேலை செய்து வசித்து வருகிறேன். எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Next Story