மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் ரூ.19 லட்சம் உண்டியல் காணிக்கை


மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் ரூ.19 லட்சம் உண்டியல் காணிக்கை
x
தினத்தந்தி 15 Dec 2021 12:36 AM IST (Updated: 15 Dec 2021 12:36 AM IST)
t-max-icont-min-icon

மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் ரூ.19 லட்சம் உண்டியல் காணிக்கை கிடைத்தது.

திருப்புவனம்,

மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் ரூ.19 லட்சம் உண்டியல் காணிக்கை கிடைத்தது.

மடப்புரம் கோவில்

திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தில் புகழ்பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் விசேஷ பூஜைகளும் மற்ற நாட்களில் அபிஷேக அலங்கார பூஜைகளும் நடைபெறும். இதேபோல் தமிழ், ஆங்கில வருட பிறப்புகள், ஆடி மாதம் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
 ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமியன்று அம்மனுக்கு பல்வேறு வகை அபிஷேகங்கள் நடைபெறும். பக்தர்கள் குடும்பத்துடன் வந்து தரிசனம் செய்து செல்வார்கள்.

ரூ.19 லட்சம் காணிக்கை

இந்த நிலையில் பக்தர்களின் காணிக்கை உண்டியல் திறப்பு நேற்று கோவில் வளாகத்தில் நடைபெற்றது. உண்டியல் திறப்புக்கு பரமக்குடி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவலிங்கம் தலைமை தாங்கினார். மடப்புரம் கோவில் உதவி ஆணையர் செல்வி, அறங்காவலர் குழு தலைவர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உண்டியலில் ரூ.19 லட்சத்து 19 ஆயிரத்து 426-ம், 247 கிராம் தங்க நகைகளும், 67 கிராம் வெள்ளி நகைகளும் இருந்தன. உண்டியல் திறப்பு நிகழ்ச்சியில் அறங்காவல் குழு உறுப்பினர்கள் பாஸ்கரன், சண்முகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story