தா.பழூர், உடையார்பாளையம் பகுதிகளில் பலத்த மழை
தா.பழூர், உடையார்பாளையம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் திடீரென மழை பெய்தது. சூரிய உதயத்துக்கு பின்னர் வானம் தெளிவாக காணப்பட்டது. மதியம் 12.30 மணியளவில் வானில் திடீரென கருமேகங்கள் திரண்டு இருள் சூழ்ந்தது. 1 மணி அளவில் குளிர்ந்த காற்றுடன் சுமார் 20 நிமிடங்கள் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து மேகமூட்டமாக இருந்த சூழ்நிலையில் மாலை 4 மணிவரை அவ்வப்போது விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. மாலையில் வானில் மேகமூட்டமாக இருந்தது.
இதேபோல் உடையார்பாளையம் பகுதியில் நேற்று வெயிலின் தாக்கம் குறைந்தது. மாலை நேரத்தில் குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. பின்னர் வானில் கருமேகங்கள் சூழ்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் உடையார்பாளையம், விளாங்குடி, ஆதிச்சனூர், சுத்தமல்லி, கழுமங்கலம், முனையதரியன்பட்டி, துளாரங்குறிச்சி, கச்சிப்பெருமாள், தத்தனூர், மணகெதி, வெண்மான்கொண்டான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
Related Tags :
Next Story