தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 15 Dec 2021 1:08 AM IST (Updated: 15 Dec 2021 1:08 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

சாலை சீரமைக்கப்படுமா? (படம் உண்டு) க்கன்பாளையம் தாலுகா புத்திரகவுண்டம் பாளையம் குறிஞ்சி நகரில் அமைக்கப்பட்ட சாலை, மழைக்கு மிகுந்த சேதம் அடைந்து காணப்படுகிறது. சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிப்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
--தினேஷ்குமார் கோபி, புத்திரகவுண்டம்பாளையம், சேலம்.
பயன்படாத குடிநீர் குழாய்
சேலம் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் பயன்பாட்டுக்காக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. அந்த குழாய் சேதமடைந்து இருப்பதால் பயணிகள் தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் பயணிகளின் நலன் கருதி அந்த குடிநீர் குழாயை சரி செய்து தர வேண்டும்.
-ராம், சேலம்.
மது பிரியர்கள் ஆக்கிரமித்த நடைபாதை
நாமக்கல் பஸ்நிலையத்தில் பஸ்கள் வெளியேறும் பகுதிக்கு அருகே சாலையை கடக்கும் வகையில் நடைபாதை பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்தை பாதசாரிகள் யாரும் பயன்படுத்துவது இல்லை. இதனால் இந்த பாலம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. அங்கு மதுபாட்டில்களை வாங்கி வந்து மது குடிப்பது போன்ற செயல்களில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அது திறந்தவெளி பாராக காட்சி அளிக்கிறது. போலீசார் இதுபோன்ற நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்க வேண்டும்.
-சங்கர், நாமக்கல்.
குப்பைகளை எரிக்கக்கூடாது
சேலம் மல்லமூப்பம்பட்டி 8-வது வார்டு சித்தனூர் பகுதியில் குப்பை தொட்டியில் உள்ள குப்பைகள் அள்ளப்படாமல் அப்படியே தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் அந்த பகுதி புகை மூட்டமாக காட்சி அளிப்பதுடன், அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்ல வேண்டிய உள்ளது. மேலும் காற்று மாசுபாடும் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு சுவாச பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதுபற்றி பல முறை புகார் அளித்தும் முறையான நடவடிக்கை இல்லை. எனவே குறிப்பிட்ட பகுதியில் குப்பைகளை தீ வைத்து எரிக்காமல் தினமும் அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், சித்தனூர், சேலம்.
பழுதான சாலைகள்
கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலையில் லண்டன் பேட்டை அருகில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் பெங்களூரு சாலையில் சிறு தரைப்பால பணிகள் நடைபெற்றது. அந்த பணிகள் முடிந்து சாலையை சரியாக சீரமைக்காமல் சென்று விட்டனர். இதனால் வாகன ஓட்டிகள் அந்த பகுதியில் செல்ல சிரமமாக உள்ளது. மேலும் விபத்துகளும் அடிக்கடி நடக்கின்றன. எனவே கிருஷ்ணகிரி நகரில் பெங்களூரு சாலையில் பழுதான இடங்களில் உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
-ஏழுமலை, கிருஷ்ணகிரி.

Next Story