ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சிவகாசியில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகாசி,
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் சிவகாசி சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். பால்சாமி, ராஜபாண்டி, அமானுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுவிஷேசமுத்து வரவேற்றார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட பொருளாளர் பிச்சை, ராஜபாளையம் வட்ட கிளை செயலாளர் பேச்சியப்பன் ஆகியோர் பேசினர். சிவகாசி சப்- கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றிய ஆய்வாளர் முத்தையாவின் பணிப்பதிவேடு அலுவலகத்தில் இருந்து மாயமானதை தொடர்ந்து கடந்த 35 ஆண்டுகளாக அவருடைய குடும்பத்திற்கு ஓய்வூதிய பணப்பலன்கள் வழங்கப்படவில்லை என்றும் அவர் பணியாற்றிய இதர இடங்களில் அவர் பணி செய்ததை பணிப்பதிவேட்டில் பதிவு செய்து ஓய்வூதிய திட்ட அறிக்கையை அனுப்பக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story