மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை


மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை
x
தினத்தந்தி 15 Dec 2021 1:36 AM IST (Updated: 15 Dec 2021 1:36 AM IST)
t-max-icont-min-icon

மேலப்பாளையத்தில் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

நெல்லை:
நெல்லை மேலப்பாளையம் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. மழை நேரத்தில் மக்கள் வசிக்க முடியாத நிலையில் உள்ள அழகிரிபுரத்தில் பாதாள சாக்கடை அமைத்து சாலைகளையும் சீரமைக்க வேண்டும். குருநாதபுரம், நாகம்மாள்புரம், எம்.எம்.சி. காலனி ஆகிய பகுதிகளுக்கும் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மழை நேரத்தில் அதிகமாக தண்ணீர் தேங்கும் ரெட்டியார்பட்டி ரோட்டில் தண்ணீர் தேங்காத வகையில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

மேலப்பாளையம் பகுதிக்குழு நிர்வாகி ஈஸ்வரன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பீர்முகமது ஷா, பகுதி செயலாளர் குழந்தைவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story