ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Dec 2021 1:56 AM IST (Updated: 15 Dec 2021 1:56 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையம் ஏ.ஐ.டி.யு.சி. மில் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராஜபாளையம்,
ராஜபாளையம் ஏ.ஐ.டி.யு.சி. மில் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க பொதுச்செயலாளர் விஜயன் தலைமை தாங்கினார். சங்க துணைத்தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.  ராஜபாளையம் இ.எஸ்.ஐ. மருத்துவமனையை தரம் உயர்த்தி முழுநேர மருத்துவமனையாக மாற்ற வேண்டும்.  போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்களை நியமனம் செய்ய ேவண்டும். தமிழ் மொழி தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கி பணி நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜபாளையம் இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு ஏ.ஐ.டி.யு.சி. மில் தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை விளக்கி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் லிங்கம், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட அமைப்பு செயலாளர் ரவி, நகர துணைச்செயலாளர் முருகன் ஆகியோர் பேசினர். இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story