நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் த.ம.மு.க. தனித்து போட்டி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் த.ம.மு.க. தனித்து போட்டியிடுவது என்று அந்த கட்சியின் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நெல்லை:
தமிழக மக்கள் முன்னேற்ற கழக உயர்மட்ட ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டையில் உள்ள அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கட்சியின் நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் பிரிசில்லா பாண்டியன், மாநில நிர்வாகிகள் நெல்லையப்பன், நளினி சாந்தகுமாரி, சண்முகசுதாகர், திரவியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தனித்து போட்டி
வருகிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தனித்து போட்டியிடுவது. மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் குடியிருப்புகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் இட ஒதுக்கீட்டின் பயனால் பதவிக்கு வந்தவர்களை அவமதிக்கும் சம்பவங்களை அரசு தனிக்கவனம் செலுத்தி தடுத்து நிறுத்த வேண்டும். 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரையில் கடும் போராட்டம் நடத்திய விவசாயிகளை பாராட்டுகிறோம்.
உறுப்பினர் சேர்க்கை
வருகிற 2022 புத்தாண்டில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியில் அதிகமானோரை உறுப்பினராக சேர்க்க வேண்டும். பழனி தண்டாயுதபாணி கோவிலில் வருகிற 13-ந்தேதி தேவேந்திரகுல வேளாளர் சமூக மண்டகப்படி விழா, ஜான்பாண்டியன் தலைமையில் நடக்கிறது. இதில் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
பட்டியல் வெளியேற்றம் கோரிக்கைக்கு வலு சேர்க்கும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் "பட்டியல் வெளியேற்றம், வாழ்வில் முன்னேற்றம்" என்ற தலைப்பில் கருத்தரங்குகள், கூட்டங்கள் நடத்த வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story