வாலிபரின் பிணத்தை ரோட்டில் வைத்து போராட்டம்
வாலிபரின் பிணத்தை ரோட்டில் வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாயில்பட்டி,
வாலிபரின் பிணத்தை ரோட்டில் வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கட்டிட தொழிலாளி
தாயில்பட்டி அருகே உள்ள கணஞ்சாம்பட்டி கிராமத்தை சேர்ந்த தங்கமுனியாண்டி மகன் முத்துச்செல்வம் (வயது21). கட்டிட தொழிலாளி.
கணஞ்சாம்பட்டியிலி ருந்து வெம்பக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள ஒரு தோட்டத்தில் தேங்கி இருந்த மழைநீரை வெளியேற்றுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை சற்று உயரமாக மூடி வைத்தனர். இந்தநிலையில் முத்துச்செல்வம் இரு சக்கர வாகனத்தில் அந்த வழியாக சென்ற போது வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் தலையில் பலத்த காயமடைந்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
போராட்டம்
இந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் முத்துச்செல்வத்தின் உடலை சிவகாசியிலிருந்து சங்கரன்கோவில் செல்லும் மெயின் ரோடு கணஞ்சாம்பட்டி விலக்கில் வைத்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம், சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த், வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன், தாசில்தார் தன்ராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அனுமதியின்றி சாலையில் வேகத்தடை போன்று அமைப்பு ஏற்படுத்தியவர்கள் மீதும், இதுகுறித்த நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த வாலிபரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என மறியலில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அப்போது அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் உங்கள் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் பேரில் அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 3 மணி ேநரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story