எவ்வளவு தண்ணீர் சென்றாலும் உள்வாங்கும் அதிசய கிணறு


எவ்வளவு தண்ணீர் சென்றாலும் உள்வாங்கும் அதிசய கிணறு
x
தினத்தந்தி 15 Dec 2021 2:57 AM IST (Updated: 15 Dec 2021 2:57 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் அருகே எவ்வளவு தண்ணீர் சென்றாலும் உள்வாங்கும் அதிசய கிணற்றை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஏந்தலூர் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகராஜ் (வயது 64). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டத்தில் 70 அடி ஆழம் கொண்ட கிணறு ஒன்று உள்ளது. அவர் கிணற்றை சுற்றிலும் 10 ஏக்கருக்கும் மேல் நெல் சாகுபடி செய்துள்ளார். 

கிணற்றின் அருகே சுமார் 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட கல்கட்டு என்ற குளம் உள்ளது. பருவ மழையால் குளமானது நிரம்பி மறுகால் பாய்ந்து தண்ணீர் கிணற்றுக்குள் செல்கிறது. கடந்த ஒரு வாரமாக கிணற்றுக்குள் தண்ணீர் சென்ற போதிலும் நிரம்பாமல் உள்ளது. தண்ணீர் எங்கே செல்கிறது? என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அந்த அதிசய கிணற்றை வீராணம் பஞ்சாயத்து தலைவர் வீரபாண்டியன் பார்வையிட்டார். மேலும் அப்பகுதி பொதுமக்களும் அந்த கிணற்றை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். 

Next Story