புகார் பெட்டி
புகார் பெட்டி
மதுரை
கொசுத்தொல்லை
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி என்.என்.பார்க், உமர் புலவர் தெருவில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. கொசுக்கடியால் இரவில் முதியவர்களும், நோயாளிகளும் தூங்க முடியாமல் தவிக்கின்றனர். மேலும், பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா உள்ளிட்ட பல்வேறு மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
காதர்மீரா, ஆர்.எஸ்.மங்கலம்.
குப்பை கிடங்காக மாறிய ஊருணி
மதுரை மாவட்டம் அழகர் கோவில் அருகே பொய்கை கரைபட்டி கிராமத்தில் கள்ளடுச்சான் ஊருணி உள்ளது. தற்போது இந்த ஊருணியில் சிலர் குப்பை கழிவுகளையும், இறைச்சி கழிவுகளையும் கொட்டி வருகின்றனர். இதனால் ஊருணி குப்பை கிடங்காக மாறி வருகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ஜெயமணி, பொய்கை கரைபட்டி.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை விவேகானந்தபுரம் பகுதியில் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. துர்நாற்றம் காரணமாக மூக்கை பிடித்துக்கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை காணப்படுகிறது. மேலும் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், தேவகோட்டை.
அடிப்படை வசதி
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி பேரூராட்சி சீயோன் தெருவில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் இங்கு வசிக்கும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பொதுமக்களின் நலன்கருதி இங்கு அடிப்படை வசதி ஏற்படுத்தப்படுமா?
கலாவதி செல்வகுமார், டி.கல்லுப்பட்டி.
மாசடையும் ஊருணி
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா ஏர்வாடி ஊராட்சிக்குட்பட்ட சடை முனியன் வலசை செல்லும் சாலையில் ஊருணி ஒன்று உள்ளது. இறந்த ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை இந்த ஊருணி தண்ணீரில் வீசி செல்கிறார்கள். இதனால் ஊருணி மாசடைந்து வருகிறது. துர்நாற்றமும் வீசுகிறது. தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஏர்வாடி.
நாய்கள் தொல்லை
மதுரை மாவட்டம் கருமாத்தூர் பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாய்கள் தெருவில் நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் துரத்தி, துரத்தி கடிக்கிறது. நாய்க்கடியால் தினமும் பலர் பாதிக்கப்படுகின்றனர். மேலும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். அஜய், கருமாத்தூர்.
பஸ் இயக்கப்படுமா?
மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதிகளில் பல கிராமங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களால் விவசாயிகளும், பொதுமக்களும் பயனடைந்து வருகின்றனர். அதேபோல பெரியார் பஸ் நிலையத்திலிருந்து விருதுநகருக்கும் நகர பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுந்தரமூர்த்தி, விருதுநகர்.
எரியாத தெருவிளக்குகள்
ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் ஊராட்சியில் உள்ள தெருவிளக்குகள் எரியாமல் உள்ளன. இப்பகுதி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் சிறுவர், சிறுமிகளும், பெண்களும் வெளியில் செல்ல அச்சம் அடைகின்றனர். மேலும் சமூக விரோதிகள் குற்ற செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி இப்பகுதியில் எரியாத தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும்.
பாரூக் உசேன் பனைக்குளம்.
Related Tags :
Next Story