திருச்செந்தூரில் தொழிலாளி தவறவிட்ட பணப்பையை போலீசில் ஒப்படைத்த 2 பேருக்கு பாராட்டு


திருச்செந்தூரில் தொழிலாளி தவறவிட்ட பணப்பையை போலீசில் ஒப்படைத்த 2 பேருக்கு பாராட்டு
x
தினத்தந்தி 15 Dec 2021 6:07 PM IST (Updated: 15 Dec 2021 6:07 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் தொழிலாளி தவறவிட்ட பணப்பையை போலீசில் ஒப்படைத்த 2 பேரை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டி பரிசு வழங்கினார்

தூத்துக்குடி:
திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தை சேர்ந்தவர் மாரிசுந்தர். தொழிலாளி. இவர் கடந்த 10-ந் தேதி திருச்செந்தூர் குறிஞ்சிநகர் பகுதியில் தன்னுடைய பணப்பையை தவற விட்டு விட்டாராம். இதனை அந்த வழியாக வந்த வீரபாண்டியன்பட்டினம் பிரசாத்நகரை சேர்ந்த இசக்கிமுத்து, நல்லதம்பி ஆகியோர் மீட்டு திருச்செந்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து உள்ளனர்.
இதைத் தொடர்ந்து அவர்களது நேர்மையை பாராட்டி, போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேற்று 2 பேரையும் நேரில் அழைத்து சால்வை அணிவித்து பாராட்டி பரிசு வழங்கினார்.

Next Story