மயிலாடுதுறை- திருச்சி இடையே எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை 1½ ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடக்கம்
1½ ஆண்டுகளுக்கு பிறகு மயிலாடுதுறை- திருச்சி இடையே மீண்டும் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நேற்று தொடங்கியது.
மயிலாடுதுறை:-
1½ ஆண்டுகளுக்கு பிறகு மயிலாடுதுறை- திருச்சி இடையே மீண்டும் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நேற்று தொடங்கியது.
மயிலாடுதுறை- திருச்சி
மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா பரவல் காரணமாக இந்த ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. கடந்த 1½ ஆண்டுகளாக ரெயில் சேவை நடைபெறாததால் மயிலாடுதுறையில் இருந்து திருச்சி செல்வதற்கு பயணிகள் சிரமப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் 1½ ஆண்டுகளுக்கு பிறகு மயிலாடுதுறை- திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நேற்று தொடங்கியது. காலை 8.15 மணி அளவில் மயிலாடுதுறையில் இருந்து புறப்படும் இந்த ரெயில் குத்தாலம், ஆடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சை வழியாக திருச்சிக்கு காலை 10.40 மணிக்கு சென்றடையும் வகையில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக திருச்சியில் இருந்து மதியம் 12.50 மணிக்கு புறப்பட்டு 3.15 மணிக்கு மயிலாடுதுறைக்கு ரெயில் வந்தடையும்.
பொதுமக்கள் வரவேற்பு
தற்போது வார வேலை நாட்களில் மட்டும் இந்த ரெயில் இயங்கும் என்றும் சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் இயங்காது என்றும் தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. வேலைக்கு செல்பவர்களுக்கும், பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் பெரிதும் உதவியாக இருந்த இந்த ரெயில் சேவை மீண்டும் தொடங்கி இருப்பது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
அதேநேரம் வர்த்தகர்கள், மருத்துவமனைக்கு செல்பவர்கள் பயன்படுத்தும் வகையில் சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளிலும் இந்த ரெயிலை இயக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story