கடலின் நீரோட்டத்தில் மாற்றம்: மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
கடலின் நீரோட்டத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
கடலூர் முதுநகர்,
கடல் சீற்றம்
கடலூரில் நேற்று காலை முதல் காற்று வேகமாக வீசியது. இதனால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. 5 முதல் 7 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்து, கரையை வந்து மோதியதை காணமுடிந்தது. இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் இருந்து விசை மற்றும் பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
மீன்பிடிக்க செல்லவில்லை
இது குறித்து மீனவர்கள் கூறுகையில், வட கிழக்கு பருவ காற்று பலமாக வீசுகிறது. இதன் தொடர்ச்சியாக கடலின் நீரோட்டத்தில் மாற்றமடைந்துள்ளது. இதனால் கடந்த 2 நாட்களாக மீனவர்கள் வலையில் அதிகளவு மீன்கள் சிக்கவில்லை. எனவே மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை என்றனர்.
இதனால் தினமும் பரபரப்பாக காணப்படும் கடலூர் துறைமுகம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.
Related Tags :
Next Story