பண்ருட்டி அருகே 10 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
பண்ருட்டி அருகே 10 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பண்ருட்டி,
சிறுமி கர்ப்பம்
பண்ருட்டி அருகே உள்ள எம்.ஏரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் மணிகண்டன் (வயது 21). இவா் கண்பார்வையற்ற தனது மனைவியையும், ஒரு வயதே ஆன ஆண் குழந்தையையும் கவனித்துக் கொள்ள நெல்லிக்குப்பம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த உறவினர் ஒருவரின் 10 வயது மகளை வீட்டில் தங்க வைத்திருந்தார். அப்போது மணிகண்டன் அந்த சிறுமியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுமி கர்ப்பமடைந்தாள்.
வாலிபர் கைது
இதையறிந்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி பெண்கள் பாதுகாப்பு எண்ணான 1098-க்கு புகார் செய்தனர். அதன்அடிப்படையில் சமூக நலத்துறை அமுதா பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையிலான போலீசார் மற்றும் சமூகநலத்துறை அதிகாரிகள் மணிகண்டன் வீட்டுக்கு சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய மணிகண்டனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
Related Tags :
Next Story