வணிக நிறுவனங்களில் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்
வணிக நிறுவனங்களில் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்
கூடலூர்
வெளிமாநிலங்களில் ஒமைக்ரான் பரவல் அதிகரித்துள்ளதால் வணிக நிறுவனங்களில் வழிகாட்டி நெறிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என வியாபாரிகளுக்கு ஆர்.டி.ஓ. உத்தரவிட்டு உள்ளார். .
ஆலோசனை கூட்டம்
கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், ஒமைக்ரான் பரவல் உலக ளவில் அதிகரித்து வருகிறது. இதைத்தடுக்க தீவிர நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. நமது மாநிலத்தின் அருகில் உள்ள கர்நாடகா, கேரளாவிலும் ஒமைக்ரான் பரவி வருகிறது.
இதனால் தமிழகத்தில் இந்த தொற்று பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நீலகிரி கலெக்டர் அம்ரித் உத்தரவின்பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடந்தது.
வழிகாட்டி நெறிமுறைகள்
இதில் அதிகாரிகள், வியாபாரிகள் சங்க தலைவர் தாமஸ், பிரதாபன் உள்ளிட்ட சங்க நிர்வாகி கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு ஆர்.டி.ஓ. சரவண கண்ணன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நமது அண்டை மாநிலமான கர்நாடகா, கேரளாவில் ஒமைக்ரான் பரவி வருகிறது. இதனால் கொரோனா உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் அரசின் வழிகாட்டி நெறிமுறைகள் எப்படி கடைபிடிக்கப்பட்டதோ, அதுபோன்று தற்போது கடைபிடிக்க வேண்டும்.
கடும் நடவடிக்கை
அதுபோன்று தங்கள் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களை பின்பற்ற வலியுறுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் மீது நடவடிக்கை எடுத்து பூட்டி சீல் வைக்கப்படும். அத்துடன் அதிகாரிகள் கொண்ட குழுவினர் சோதனையும் நடத்துவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து கொரோனா தொடர்பாக விழிப்புணர்வு பலகை வைப்பது, கிருமி நாசினியை வைக்க வேண்டும், பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க கடைகள் முன்பு அடையாள வட்டங்கள் வரைதல், மற்றும் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
அடையாள குறியீடு
இதைத்தொடர்ந்து கூடலூர் பகுதியில் உள்ள கடைகள் வணிக நிறுவனங்களில் அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றும் வகையில் சமூக இடைவெளிக்கான அடையாள குறியீடு வரைதல் உள்ளிட்ட பணிகளில் வியாபாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story