822 பேருக்கு பல மாநிலங்களில் ரேஷன்கார்டு வழங்கல்துறை அதிகாரிகள் விசாரணை
822 பேருக்கு பல மாநிலங்களில் ரேஷன்கார்டு வழங்கல்துறை அதிகாரிகள் விசாரணை
கூடலூர்
கூடலூர் தாலுகாவில் 822 பேருக்கு பல மாநிலங்களில் ரேஷன் கார்டு பெற்றது தெரியவந்தது. இது தொடர்பாக வழங்கல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரேஷன் கார்டுகள்
இந்தியா முழுவதும் வசிக்கும் மக்களுக்கு ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சலுகைகள் பெற ஆதார் கார்டு வழங்கவேண்டிய நிலை உள்ளது.
தற்போது ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தின் அடிப்படையில் அனைத்து மாநிலங்களில் உள்ள ரேஷன் கார்டுகளை தணிக்கை செய்ய உத்தரவிட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களில் ரேஷன் அட்டைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
822 பேரிடம் விசாரணை
இந்த ஆய்வில் கூடலூர் தாலுகாவில் மட்டும் 822 பேர் கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் ரேஷன் கார்டுகள் எடுத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களிடம் வட்ட வழங்கல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் கூறும்போது, ஒரே பெயரில் கேரளா, கர்நாடகால் ரேஷன் கார்டு எடுத்தவர் கள் ஒரு லட்சத்துக்கும் மேல் உள்ளனர் என்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தி அவர்கள் ஏதாவது ஒரு மாநிலத்தில் ரேஷன் கார்டு இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.
Related Tags :
Next Story