கள்ளக்குறிச்சியில் நுகர்வோர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்


கள்ளக்குறிச்சியில் நுகர்வோர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Dec 2021 9:12 PM IST (Updated: 15 Dec 2021 9:12 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் நுகர்வோர் பேரவையினர் ஆர்ப்பாட்டம் காணாமல் போன ஆழ்துளை கிணற்றை கண்டுபிடித்து தரகோரிக்கை

கள்ளக்குறிச்சி

மக்கள் உரிமை, லஞ்ச ஒழிப்பு மற்றும் நுகர்வோர் பேரவை சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பேரவை தலைவர் ராமநாத அடிகள் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி பெரிய ஏரியில் இருந்து உபரிநீர் செல்வதற்காக சங்கராபுரம் மெயின் ரோடு பகுதியில் இருந்த தடுப்பு சுவர் மற்றும் ஓடை வாய்க்கால், சங்கராபுரம் சாலை பெட்ரோல் பங்க் அருகில் இருந்த ஆழ்துளை கிணறுடன் கூடிய கைப்பம்பு ஆகியவற்றை காணவில்லை. 

எனவே காணாமல் போன தடுப்புசுவர், ஓடை வாய்க்கால், ஆழ்துளை கிணறுடன் கூடிய கைப்பம்பு ஆகியவற்றை கண்டுபிடித்துதரக்கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ஜானகிராமன், அண்ணாமலை, சங்கர், சக்திவேல், செல்வராஜ், அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு மொட்டை அடிக்கும் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு போலீசார் அனுமதி கொடுக்காததால் ஆர்ப்பாட்டம் மட்டும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Next Story