போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் சிறுவர்களுக்கான பூங்கா
போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் சிறுவர்களுக்கான பூங்கா
உடுமலை,
உடுமலையில், போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் சிறுவர்களுக்கான பூங்கா மற்றும் போலீசாருக்கான இறகுபந்து விளையாட்டு மைதானத்தை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.சுதாகர் திறந்து வைத்தார்.
சிறுவர் பூங்கா
உடுமலை துணை போலீஸ் சூப்பிரெண்டு அலுவலக வளாகத்தில் போலீசாருக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் குடும்பத்துடன் குடியிருந்து வருகின்றனர். இவர்களது குழந்தைகள் விளையாடுவதற்காக இந்த குடியிருப்பு வளாகத்தில் சறுக்கு, ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களுடன் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.மேலும் போலீசார் விளையாடுவதற்காக இறகுபந்து விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறுவர் பூங்கா மற்றும் போலீசாருக்கான இறகுபந்து விளையாட்டு மைதானம் ஆகியவற்றின் திறப்பு விழா நேற்று நடந்தது. இவற்றை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.சுதாகர் திறந்து வைத்தார்.அவர், துணை போலீஸ் சூப்பிரெண்டு அலுவலகம் அருகே மரக்கன்றையும் நட்டினார். விழாவில் உடுமலை துணை போலீஸ் சூப்பிரெண்டு தேன்மொழிவேல், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள்,
சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
ஐ.ஜி.ஆய்வு
நிகழ்ச்சியைத்தொடர்ந்து மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.சுதாகர், உடுமலை துணை போலீஸ் சூப்பிரெண்டு அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.
Related Tags :
Next Story