தொப்பூர் கணவாயில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு


தொப்பூர் கணவாயில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 15 Dec 2021 9:56 PM IST (Updated: 15 Dec 2021 9:56 PM IST)
t-max-icont-min-icon

தொப்பூர் கணவாயில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நல்லம்பள்ளி:
தொப்பூர் கணவாயில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது
குஜராத் மாநிலத்தில் இருந்து பிஸ்கட் ஏற்றிக்கொண்டு ஒரு கன்டெய்னர் லாரி திருச்சிக்கு புறப்பட்டது. இந்த லாரியை பீகார் மாநிலத்தை சேர்ந்த குலாம் (வயது22) என்பவர் ஓட்டி வந்தார். தர்மபுரி மாவட்டம் வழியாக நேற்று லாரி வந்து கொண்டு இருந்தது. 
தொப்பூர் கணவாய் முதல் வளைவில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கன்டெய்னர் லாரி சாலையில் தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்து காரணமாக தொப்பூர் கணவாயில் தர்மபுரி-சேலம் மார்க்கமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீசார் விசாரணை
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து வந்து விபத்தில் சிக்கி தவித்த டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்துக்குள்ளான கன்டெய்னர் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். 
இந்த விபத்து காரணமாக தொப்பூர் கணவாயில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story