விபத்தில் காயம் அடைந்தவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்த பா.ஜனதா தலைவர்


விபத்தில் காயம் அடைந்தவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்த பா.ஜனதா தலைவர்
x
தினத்தந்தி 15 Dec 2021 10:06 PM IST (Updated: 15 Dec 2021 10:06 PM IST)
t-max-icont-min-icon

விபத்தில் காயம் அடைந்தவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்த பா.ஜனதா தலைவர்

மூலனூர், 
திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த சக்திவேல் என்பவரின் மனைவி சுசீலா (வயது 65).  இவர்  கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரத்துப் பாளையத்தில் நடைபெற்ற துக்க காரியத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து  உடுமலை நோக்கி காரில் தனது உறவினர்களுடன் வந்து கொண்டிருந்தார். மூலனூர்-தாராபுரம் சாலை ஆலம்பாளையம் அருகே கார் வந்து கொண்டிருந்தபோது  எதிரே உடுமலையில் இருந்து கரூருக்கு கோழி தீவனம் ஏற்றிக்கொண்டு  கன்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் காரும், கன்டெய்னர் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் சுசீலா லேசான காயங்களுடன் மயக்கமடைந்தார். அவருடன் வந்தவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
அப்போது  அந்த வழியாக பழனியில் இருந்து நாமக்கல் செல்வதற்காக தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வந்து கொண்டிருந்தார். இந்த விபத்தை பார்த்ததும் அவர் தனது காரை நிறுத்தி விவரங்களை கேட்டறிந்து மூலனூர் போலீசாருக்கு  தகவல் தெரிவித்தார். பின்னர் தாமதம் செய்யாமல்  காயமடைந்த சுசீலா மற்றும் அவரது உறவினர் ஒருவரையும் அண்ணாமலை தனது  காரில் ஏற்றிக்கொண்டு மூலனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்து நடந்ததும் காயம் அடைந்தவர்களை உடனே காரில் ஏற்றி மருத்துவ மனையில் சேர்த்த பா.ஜனதா தலைவரின் மனிதாபிமானத்தை பொதுமக்கள் பாராட்டினர்.

Next Story