இடிந்து விழும் நிலையில் நீர்த்தேக்க தொட்டி


இடிந்து விழும் நிலையில் நீர்த்தேக்க தொட்டி
x
தினத்தந்தி 15 Dec 2021 10:12 PM IST (Updated: 15 Dec 2021 10:12 PM IST)
t-max-icont-min-icon

இடிந்து விழும் நிலையில் நீர்த்தேக்க தொட்டி

தாராபுரம், 
தாராபுரம் அருகே உள்ள பெரமியம் ஊராட்சியில் நல்லிகவுண்டன்பாளையம் உள்ளது.  இங்கு  200-க்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்த பகுதிக்கு இல்லியம்பட்டி பிாிவு அருகே மேல்நிலை நீா் தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த குடிநீர் தொட்டி கட்டப்பட்டு   10 ஆண்டுகள் ஆகிறது. அந்த தொட்டியில் காரைகள் பெயா்ந்து
கான்கிரீட் கம்பிகள் வெளியே தொிகிறது. அதுபோன்று அதன் நான்கு தூண்களிலும்
வெடிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த மேல்நிலை நீா்தேக்க தொட்டி கீழே விழும் நிலையில் உள்ளது. இருப்பினும் அதில் தினமும் நீரேற்றம் செய்து வினியோகம் செய்து வருகின்றனா். எனவே  மேல்நிலை நீா்தேக்க தொட்டியை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.

Next Story