தியாகதுருகம் அருகே சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்


தியாகதுருகம் அருகே சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 15 Dec 2021 10:16 PM IST (Updated: 15 Dec 2021 10:16 PM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம் அருகே சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்


கண்டாச்சிமங்கலம்

கள்ளக்குறிச்சியில் இருந்து கூத்தக்குடி செல்லும் சாலையை  இருவழி சாலையாக அகலப்படுத்தும் பணி நெடுஞ்சாலைத்துறையினர் மூலம் நடைபெற்று வருகிறது. 

இதில் தியாகதுருகம் அருகே விருகாவூர் பகுதியில் சாலை புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள், கடைகள், சிமெண்ட் கூரைகள், படிகட்டுகள் ஆகியவற்றை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ராஜ்குமார் தலைமையில் கள்ளக்குறிச்சி உதவி கோட்ட பொறியாளர் மணிமொழி, தாசில்தார் விஜயபிரபாகரன், வருவாய் ஆய்வாளர் பாலு, ஆகியோர் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story