ரசாயன கலவையில் பழுக்க வைக்கப்படும் வாழைப்பழங்கள்
ரசாயன கலவை கொண்டு பழுக்க வைக்கப்படும் வாழைப்பழங்கள் அழுகி வீணாகி வருகிறது.
புதுச்சேரி, டிச.
ரசாயன கலவை கொண்டு பழுக்க வைக்கப்படும் வாழைப்பழங்கள் அழுகி வீணாகி வருகிறது.
செயற்கை முறையில்...
இயற்கை முறையில் தானாக விளைந்து பழுக்கும் பழங்களுக்கு என தனி சுவை உண்டு. அவற்றை மக்கள் விரும்பி உண்ணுவார்கள். ஆனால் இப்போது பழங்கள் செயற்கை முறையிலேயே பழுக்க வைக்கப்படுகிறது. அரைகுறை விளைச்சல் உடையவை கூட செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படுகிறது.
குறிப்பாக மாம்பழங்கள் என்றால் கார்பைடு கல் கொண்டு பழுக்க வைக்கப்படுகிறது. அவை உடலுக்கு பெரும் கெடுதலை உண்டாக்கும் என்று தெரிந்திருந்தும் குறுகிய காலத்தில் அதிகம் சம்பாதிக்க இப்படி செய்கின்றனர்.
ரசாயன கலவை
கடந்த காலங்களில் வாழைப்பழங்கள் புகை மூட்டம் போட்டு பழுக்க வைக்கப்படும். இந்த பழங்கள் நன்கு பழுத்த நிலையிலும் சில நாட்கள் கெடாமல் இருக்கும். ஆனால் இப்போது ரசாயன கலவை தெளிக்கப்பட்டு வாழைப்பழங்கள் பழுக்க வைக்கப்படுகிறது.
இந்த ரசாயன கலவை தெளித்த மறுநாளே பழங்கள் பழுத்து விடுகின்றன. ஆனால் இந்த பழங்கள் சில நாட்கள் கூட தாங்குவதில்லை. பழத்தின் தோல் பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும், உள்ளே உள்ள பழம் ஓரிரு நாட்களிலேயே நொந்துபோய், அழுகி விடுகின்றன.
உடல்நல கோளாறு
இந்த பழங்களை சாப்பிடும்போது வயிற்றுப்புண், செரிமான கோளாறு, சிறுநீரக கோளாறு போன்றவைகளையும் ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. தற்போது மழைக் காலம் என்பதால், ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் பழுத்த உடனேயே அழுக தொடங்கியுள்ளன. இதன் காரணமாக பெரிய மார்க்கெட் பகுதியில் பழுத்து, அழுகிய வாழை தார்கள் அதிக அளவில் கொட்டப்படுவதை காண முடிகிறது. பொதுமக்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story