ராமேசுவரம், தனுஷ்கோடி கடலில் இந்திய கடலோர காவல்படை விமானம் தாழ்வாக பறந்ததால் பரபரப்பு


ராமேசுவரம், தனுஷ்கோடி கடலில் இந்திய கடலோர காவல்படை விமானம் தாழ்வாக பறந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 15 Dec 2021 10:50 PM IST (Updated: 15 Dec 2021 10:50 PM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம், தனுஷ்கோடி கடல் பகுதியில் இந்திய கடலோர காவல்படை விமானம் தாழ்வாக பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமேசுவரம், 

ராமேசுவரம், தனுஷ்கோடி கடல் பகுதியில் இந்திய கடலோர காவல்படை விமானம் தாழ்வாக பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக கடல்பகுதி

ராமேசுவரத்துக்கு மிக அருகாமையில் இலங்கை கடல் பகுதி உள்ளதால் அவ்வப்போது ராமேசுவரம், தனுஷ்கோடி கடல் பகுதி வழியாக இலங்கைக்கு கடல் அட்டை, மஞ்சள், கஞ்சா, பீடி இலை உள்ளிட்ட பல பொருட்கள் கடத்தப்படுகின்றன. அதுபோல் இலங்கையில் இருந்து தங்கக்கட்டிகள் கடத்தப்படுவதும் நடக்கிறது.
எனவே மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை நிலையத்திற்கு சொந்தமான 3 ஹோவர் கிராப்ட் கப்பல்கள் மற்றும் 2 அதிவேக கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதுதவிர உச்சிப்புளி பருந்து கடற்படை விமான தளத்தில் இருந்து 2 ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆளில்லாத விமானம் ஒன்றும் ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.

அதிநவீன விமானம் ரோந்து

இந்த நிலையில் சென்னையில் இருந்து இந்திய கடலோர காவல்படை நிலையத்திற்கு சொந்தமான அதிநவீன விமானம் ஒன்று நேற்று பகல் 11 மணியளவில் தமிழக கடல் பகுதியில் தாழ்வாக பறந்தபடி ரோந்து பணியில் ஈடுபட்டது. அந்த விமானம் மண்டபம் முதல் ராமேசுவரம், தனுஷ்கோடி மற்றும் இந்திய கடல் எல்லை வரையிலான கடல் பகுதியில் தாழ்வாக பறந்த படி தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது.
 நேற்று கடும் பனிமூட்டம் காணப்பட்டதால் கடலும் வானமும் ஒன்று போல காட்சியளித்தது. இந்திய கடலோர காவல்படையின் அதிவேக விமானம் நேற்று தாழ்வாக பறந்ததால் பரபரப்பும் ஏற்பட்டது.

Next Story