ராமேசுவரம்-அஜ்மீர் வாராந்திரஎக்ஸ்பிரஸ் ரெயில் மீண்டும் இயக்கம்


ராமேசுவரம்-அஜ்மீர் வாராந்திரஎக்ஸ்பிரஸ் ரெயில் மீண்டும் இயக்கம்
x
தினத்தந்தி 15 Dec 2021 11:26 PM IST (Updated: 15 Dec 2021 11:26 PM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம்-அஜ்மீர் வாராந்திரஎக்ஸ்பிரஸ் ரெயில் மீண்டும் இயக்கப்பட உள்ளது.

மதுரை, 
மதுரை கோட்டத்துக்கு உள்பட்ட ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீருக்கு ஹம்சபர் என்ற பெயரில் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வந்தது.  கொரோனா ஊரடங்குக்கு பின்னர் தற்போது அந்த ரெயில் மீண்டும் இயக்கப்படஉள்ளது. 
அதன்படி, இந்த ரெயில் (வ.எண்.20973) வருகிற 21-ந் தேதி முதல் அஜ்மீரில் இருந்து சனிக்கிழமைதோறும் இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமைகளில் இரவு 9 மணிக்கு ராமேசுவரம் வந்தடையும். மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.20974) வருகிற 21-ந் தேதி முதல் ராமேசுவரத்தில் இருந்து செவ்வாய்க்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.25 மணிக்கு மானாமதுரை ரெயில் நிலையமும், நள்ளிரவு 3 மணிக்கு திருச்சி ரெயில்நிலையமும் சென்றுஅடைகிறது. 
வியாழக்கிழமை இரவு 11 மணிக்கு அஜ்மீர் ரெயில் நிலையம் சென்றடையும். ரெயில், மானா மதுரை, திருச்சி, அரியலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, கூடூர், நெல்லூர், விஜயவாடா, வாரங்கல், பல்ஹர்சா, சந்திராபூர், நாக்பூர், பீட்டல், இட்டார்சி, போபால், தேவாஸ், லட்சுமிபாய் நகர், பதேஹாபத், ரட்லம், மன்டசோர், நிமாச், சித்தூர்கார், பில்வார் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Next Story