தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
பள்ளம் சீரமைக்கப்பட்டது
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்காட் கிறிஸ்தவ பள்ளியில் இருந்து வாட்டர் டேங்க் சாலைக்கு செல்லும் திருப்பத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சாலை சேதமடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் இருந்தது. இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. உடனே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையில் இருந்த பள்ளத்தை சீரமைத்தனர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
மார்த்தாண்டம் அருகே கொல்லஞ்சி கிராமத்தில் ஒரு ரேஷன் கடை உள்ளது. இந்த கடையில் இருந்து ஏராளமான பொதுமக்கள் உணவு பொருட்களை வாங்கி செல்கிறார்கள். தற்போது இந்த கடையின் மேற்கூரை மிகவும் சேதமடைந்து காங்கிரீட்டு பெயர்ந்து விழுகிறது. அத்துடன் மேற்கூரையில் கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே, ேபராபத்து ஏற்படும் முன்பு பழைய கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செர்வின் குமார். கல்லுக்கூட்டம்.
சுகாதார சீர்கேடு
நாகர்கோவில் மாநகராட்சி 29-வது வார்டுக்கு உட்பட்ட ஊட்டுவாழ்மடம், வடக்குத்தெருவில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து ஏராளமான பொதுமக்கள் குடிநீர் பிடித்து செல்கிறார்கள். தற்போது அந்த பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும், குப்பைகள் இடைேய விஷ பிராணிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே, குப்பைகளை அகற்றி அந்த பகுதியை சுத்தமாக பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கரிகாலன், ஊட்டுவாழ்மடம்.
சாலை துண்டிப்பு
குளச்சல் அருகே பாலப்பள்ளம் தெற்குபிடாகை பகுதியில் உள்ள சாலை வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் வாகனங்களிலும், நடந்தும் செல்கிறார்கள். கடந்த மாதம் பெய்த கனமழையால் சாலைேயாரம் மண்ணரிப்பு ஏற்பட்டு இடிந்து விழுந்தது. இதனால், அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, துண்டிக்கப்பட்ட சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தனிஷ், தெற்குபிடாகை.
சாலையில் புழுதி காற்று
நாகர்கோவில், வடசேரி பகுதியில் உள்ள சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. தற்போது அந்த வழியாக வாகனங்கள் செல்லும் போது புழுதி காற்று வீசுகிறது. இதனால், இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்களும், நடந்து செல்கிறவர்களும் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தமிழரசு, ஆரல்வாய்மொழி.
தரைப்பாலத்தை உயர்த்த வேண்டும்
நித்திரவிளை அருகே எஸ்.டி. மங்காடு பகுதியில் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. இந்த பாலம் வழியாக பொதுமக்கள் இருசக்கர வானங்களிலும், நடந்தும் செல்கிறார்கள். ஆற்றில் அதிகமான வெள்ளம் வரும்போது இந்த பாலம் மூழ்கி விடுவதால் அந்த வழியாக போக்குவரத்து முற்றிலும் தடைப்படுகிறது. இத்தகைய நேரங்களில் இந்த பாலம் வழியாக செல்கிறவர்கள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே இந்த பாலத்தை 2 அல்லது 3 அடி உயர்த்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-நாராயணன், மருங்கூர்.
பாழடைந்து போன படிப்பகம்
அழகியமண்டபத்தில் இருந்து திருவிதாங்கோடு செல்லும் வழியில் மிகவும் பழமையான அன்னை இந்திரா படிப்பகம் உள்ளது. இது 1986-ம் ஆண்டு திறக்கப்பட்டது. தற்போது இந்த படிப்பகம் பராமரிப்பு இன்றி, பயன்பாடற்ற நிலையில் புதர் நிறைந்து காணப்படுகிறது. இதை பராமரித்து படிப்பகமாகவும், நிழற்குடையாகவும் பயன்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெஸ்பின், சிராயன்குழி.
Related Tags :
Next Story