கடையில் ரூ.8 லட்சம் கொள்ளை
தினத்தந்தி 15 Dec 2021 11:34 PM IST (Updated: 15 Dec 2021 11:34 PM IST)
Text Sizeகடையில் ரூ.8 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது.
மதுரை,
மதுரை எழுகடல் அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் குமார் (வயது 43). இவர் கீழஆவணி மூலவீதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் 2-வது மாடியில் அழகுசாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து கடையை பூட்டி விட்டு சென்றார். மறுநாள் காலை வந்தபோது கடையின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் கடைக்குள் வைத்து இருந்த 8 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அவர் விளக்குத்தூண் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire