அனைத்து கிராமங்களிலும் டெங்கு பணியாளர்கள் நியமனம்


அனைத்து கிராமங்களிலும் டெங்கு பணியாளர்கள் நியமனம்
x
தினத்தந்தி 15 Dec 2021 11:53 PM IST (Updated: 15 Dec 2021 11:53 PM IST)
t-max-icont-min-icon

தண்டராம்பட்டு ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் டெங்கு பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று ஒன்றியக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

தண்டராம்பட்டு

தண்டராம்பட்டு ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் டெங்கு பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று ஒன்றியக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

ஒன்றியக்குழு கூட்டம்

தண்டராம்பட்டு ஒன்றியக்குழுவின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் பரிமளா கலையரசன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பூங்கொடி நல்லத் தம்பி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிர்மலா, மகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பேசுகையில், தானிப்பாடியில் உள்ள தேரோடும் வீதிகளில் சாக்கடை நீர் செல்வதால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. 

அந்த சாலையை சீரமைப்பதோடு தானிப்பாடி பஸ் நிலையத்தையும் சீரமைத்து, அங்குள்ள வணிக வளாகங்களை ஏலம் விட்டு வருவாயை பெருக்க வேண்டும்.

ஊராட்சி செயலாளர்களை மாற்ற வேண்டும்
அனைத்து ஏரிகளையும் கண்காணித்து அவற்றை ஒன்றியத்தின் சார்பாக டெண்டர் விட வேண்டும். 

தற்போது மழைக்காலம் என்பதால் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க எல்லா ஊராட்சிகளிலும் டெங்கு பணியாளர்களை நியமிக்க வேண்டும். 

அனைத்து ஊராட்சிகளிலும் பணியாற்றி வரும் செயலாளர்கள் பல ஆண்டு காலமாக ஒரே ஊராட்சியில் பணியாற்றுகிறார்கள். எனவே அனைத்து ஊராட்சி செயலாளர்களையும் மாற்றம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு பிரச்சினைகளை குறித்து பேசினர்.

அனைத்து கிராமங்களிலும் டெங்கு பணியாளர்கள்

இதற்கு பதிலளித்த ஒன்றியக்குழு தலைவர் பரிமளா கலையரசன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உறுப்பினர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தண்டராம்பட்டு ஒன்றியத்தில் உள்ள 47 ஊராட்சியிலும் டெங்கு பணியாளர்கள் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். 

Next Story