ஆம்பூர் அருகே ஸ்கூட்டருடன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட வாலிபர். கயிறுகட்டி பொதுமக்கள் மீட்டனர்


ஆம்பூர் அருகே  ஸ்கூட்டருடன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட வாலிபர். கயிறுகட்டி பொதுமக்கள் மீட்டனர்
x
தினத்தந்தி 15 Dec 2021 11:54 PM IST (Updated: 15 Dec 2021 11:54 PM IST)
t-max-icont-min-icon

ஸ்கூட்டருடன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட வாலிபர்

ஆம்பூர்

ஆம்பூரை அடுத்த பச்சகுப்பம் பகுதியில் நரியம்பட்டு-குடியாத்தம் இடைேய பச்சகுப்பம் பாலாற்று தரைபாலத்தின் மீது வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த வழியாக குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த பஹசுதீன் (வயது 34) என்பவர் தனது ஸ்கூட்டரில் ஆம்பூரில் இருந்து குடியாத்தத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது பச்சகுப்பம் தரைபாலத்தை கடந்து செல்ல முயன்றார். அந்த நேரத்தில் திடீரென அவர் ஸ்கூட்டருடன் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டார். சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்க முயன்றனர். உடனே கயிறு கட்டி அவரை உயிருடன் மீட்டனர். அவரின் ஸ்கூட்டரும் மீட்கப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story