திமிரி அருகே கோமாரி நோய் தாக்கி கால்நடைகள் பலி
கோமாரி நோய் தாக்கி கால்நடைகள் பலி
ஆற்காடு
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த தாமரைப்பாக்கம், வணக்கம் பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்கியுள்ளது. இதனால் ஆடுகள், ஆட்டுக்குட்டிகள், பசுக்கள் மற்றும் கன்று குட்டிகள் என 50-க்கும் மேற்பட்ட கால்நடைகள் அடுத்தடுத்து பலியானதாக கூறப்படுகிறது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகள் கோமாரி நோய் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் கோமாரி நோயால் பெரும்பாலான கால்நடைகள் உடல் நலமின்றி தீனிகளை சரிவர சாப்பிடாமல் இறந்துவிடுகிறது. இதனால் கால்நடைகளை நம்பி உள்ள ஏழைகளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இறந்த கால்நடைகளுக்கும், உடல் நலம் இன்றி உள்ள கால்நடைகளுக்கும் நிவாரண உதவி வழங்க வேண்டும், கோமாரி நோய் தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.
Related Tags :
Next Story