மின்சாரம் தாக்கி கணவர் பலி


மின்சாரம் தாக்கி கணவர் பலி
x
தினத்தந்தி 15 Dec 2021 11:57 PM IST (Updated: 15 Dec 2021 11:57 PM IST)
t-max-icont-min-icon

திருமங்கலம் அருகே வயலில் அறுந்து கிடந்த மின்சார வயரை மிதித்து கணவர் பலியானார். காப்பாற்ற சென்ற மனைவி படுகாயம் அடைந்தார்.

திருமங்கலம், 
திருமங்கலம் அருகே வயலில் அறுந்து கிடந்த மின்சார வயரை மிதித்து கணவர் பலியானார். காப்பாற்ற சென்ற மனைவி படுகாயம் அடைந்தார்.
பருத்தி செடி
திருமங்கலம் அருகே உள்ள வலயங்குளத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 36). விவசாயி. இவருடைய மனைவி அக்கம்மாள் (31).  கிருஷ்ணன் அவருடைய வயலில் பருத்தி விவசாயம் செய்துள்ளார். நேற்று பருத்தி செடிக்கு களை எடுப்பதற்காக தனது மனைவியுடன் வயலுக்கு சென்றார். கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் மின்சார வயர் துருப்பிடித்து அறுந்து கீழே விழுந்து கிடந்துள்ளது. எதிர்பாராத விதமாக மின் வயரை அவர் மிதிதத்தில் மின்சாரம் தாக்கி உடல் கருகி துடிதுடித்து இறந்தார். 
உடனே பின்னால் வந்த மனைவி அக்கம்மாள் கணவரை காப்பாற்ற அவரது கையை பிடித்து இழுத்துள்ளார். இதில் அவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.  
விசாரணை
இதைகண்ட அக்கம்பக்கத்தினர் மின்வாரியத்துக்கு தகவல் தெரிவித்து மின்சாரத்தை துண்டித்தனர். ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு திருமங் கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். 
மின்சாரம் பாய்ந்து இறந்த கிருஷ்ணனை உடல் பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story